பொருளை திருடி வைத்துக்கொண்டு… செமையாக டீல் பேசும் குரங்கு… என்ன ஒரு புத்திசாலித்தனம்.. வைரலாகும் காணொளி..!

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணன் படங்களில் தான் பார்த்திருப்போம்.

   

ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். சின்ன வயதில் தொப்பி வணிகர் ஒருவர் மரத்து அடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது குரங்குகள் அவர் தொப்பியைத் தூக்கிச் சென்றுவிடும். அந்தத் தொப்பிகளைப் மீண்டும் பெற வணிகர் ஒரு தொப்பியைத் தூக்கிவீசுவார்.

பதிலுக்கு, குரங்குகள் தங்கள் தலையில் இருக்கும் தொப்பிகளைத் தூக்கிவீசும். இந்தக் கதையில் வேண்டுமானால் குரங்குகள் முட்டாளாக்கப் பட்டிருக்கலாம். ஆனால் நிஜத்தில் குரங்குகள் செம புத்திசாலித்தனம் கொண்டவை. அதிலும் மனிதர்களிடமே செம கெத்தாக டீல் பேசின. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மலையோரப் பகுதியில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்த குரங்கு ஒன்று கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது அது ஒரு உயரமான இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. கண்ணாடியின் உரிமையாளர் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் குரங்கு கொடுக்கவில்லை.

கடைசியில் குரங்கிற்கு அவர் ஒரு ஜூஸ் பாக்கெட்டை நீட்டிக்கொண்டே கண்ணாடியைக் கேட்டார். கடைசியில் அந்த டீலுக்கு ஒத்துக்கொண்டு கண்ணாடியை கொடுத்துவிட்டு ஜூஸை வாங்கிக் குடித்தது குரங்கு. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.