
ஒரு இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயிலில் இருந்து ஒரு ஸ்டேஷனில் இறங்கி அந்த ரயில் மற்றொரு ஸ்டேஷனுக்கு செல்வதற்குள் ஓடியே அந்த ட்ரெயினை பிடித்து விடுகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம்.
மக்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவில் நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். அப்போது ஒரு சில வீடியோக்களை பார்க்கிறார்கள். அதில் பல வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். தற்போது இளைஞர்கள் பலரின் திறமை சமூக வலைதளம் மூலமாக வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தான் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
முதலில் ரயிலில் இருந்து இறங்கும் இளைஞர் ஓடுகிறார். ஓடிக்கொண்டே இருக்கிறார். இவர் வேகமாக ஓடி அந்த ரயில் அடுத்த ரயில் நிலையத்திற்கு வரும்போது இவரும் சரியாக அதே ரயில் நிலையத்திற்கு வந்து அந்த ரயிலில் ஏறுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் திரில்லாக ஆர்வமாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
This runner exited a train, ran to the next stop, on got back on the same train pic.twitter.com/mk8PPynVqa
— Vala Afshar (@ValaAfshar) December 27, 2022