
திருமணம் என்பது ஒவொருவரின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது , இந்த அற்புத நிகழ்வில் சொந்தங்கள் பலரும் கலந்து கொண்டு அந்த விழாவை திருவிழா போல மாற்றி விடுகின்றனர் , அப்படி ஒரு நிகழ்வு தான் சில நாட்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் நடந்துள்ளது ,
சமீபத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கான சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் ரமேஷ் , இவர் அந்த ஊர் மக்களுக்கு பல்வேறு நல பணிகளை செய்து வந்தார் , இதனால் மக்கள் இவரை தலைவராக நியமித்து விட்டனர் , சில நாட்களுக்கு முன்னர் இவரது மகளின் திருமணம் அனைவரின் முன்னிலையிலும் நடந்து முடிந்தது ,
இந்த திருமணத்தில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது , அது என்னவென்றால் இவரே நடந்து சென்று ஒவொரு வீடாக பத்திரிகை வைத்துள்ளார் , அதை விட அந்த பத்திரிகையில் அந்த கிராமத்தில் உள்ள 900 குடும்பத்தின் பெயரையும் அந்த பத்திரிகையில் அச்சிட்டிருந்தார் , இதனை பார்த்த அந்த ஊர் மக்கள் நெகிழ்ந்து போனார்கள் .,