
திருடன் ஒருவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்மணியின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஓடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய சூழலில் எங்கு பார்த்தாலும் திருட்டு பயம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெண்கள் தைரியமாக ரோட்டில் நகைகளை போட்டுக்கொண்டு நடந்து செல்வதற்கே மிகவும் பயப்படுகிறார்கள்.
அச்சம் கொள்கிறார்கள். யாராவது அருகில் வந்தாலே சந்தேகம் எழுகின்றது. நம் நகையை பறித்துக் கொண்டு செல்வார்களோ என்று எண்ணி எண்ணியே செல்ல வேண்டி உள்ளது. அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்மணிகள் ரோட்டில் நடந்து செல்கிறார்கள். அப்போது அந்த பக்கம் வந்த நபர் ஒருவர் திடீரென்று ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து நகையை பறித்துக் கொண்டு ஓடுகிறார்.
இதை பார்த்து அவர் கூச்சலிட அங்கிருந்தவர்கள் அனைவரும் வேகமாக ஓடி வந்து அவரை பிடிக்க முற்படுகின்றனர். அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த கார்காரர் தனது வண்டியை திருப்பிக் கொண்டு வேகமாக அந்த நம்பரை விரட்டுகிறார் . இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram