மணமேடையில் புரோகிதர் செய்த கீழ்த்தரமான செயல் : திருமண வீடியோவை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தார்.

அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ஆகும். தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகி இருந்ததை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து அவர் மீது பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள புரோகிதரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.