இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது.
சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.
இங்கேயும் அப்படித்தான். கல்யாண வீடு களைகட்டி இருந்தது. மணப்பெண் பட்டு மாற்றிக்கொள்ளும் சடங்கிற்காக சென்றிருந்தார். அப்போது, திடீரென மணமேடையில் தன் சக நண்பர்களோடு சேர்ந்து மாப்பிள்ளை செம குத்தாட்டம் போட்டார். இந்தக் காட்சியை இணையத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதோ அந்தக் காட்சி….