கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அன்பு செல்வி தடகள வீராங்கனை என்பதால், மேற்படிப்பு படித்து விளையாட்டு பிரிவில் நான் அரசு வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை, இதனால் இருவருக்குள்ளும் இப்போதைக்கு தாம்பத்யம் வேண்டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார்.
செல்வமும் அதற்கு ஒப்புக் கொள்ள, இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்பு செல்வி முடித்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால், செல்வம் வலுக்கட்டாயமாக அன்புசெல்வியிடம் தம்பத்யம் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவர் திருநங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடத்தில் இது குறித்து கேட்ட போது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், வேதனையடைந்த செல்வம் காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு புகாரளித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வழக்கில் செல்வம் தரப்பில் நியாயம் இருந்ததால், அவரை ஏமாற்றி திருமணம் செய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.