80களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை ராதிகா 1999-க்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். சினிமா போன்று சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற ராதிகா சன்டிவியில் கடந்த 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே மற்றும் இரண்டை வேடங்களில் வாணி ராணி என அனைத்து சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
22 வருடங்களுக்கு பிறகு சித்தி தொடரின் 2-ம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா திடீர் அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை தீரவில்லை. இரண்டாவது கொரோனா அலை வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வருவதால் மக்கள் எல்லோரும் அச்சத்தில் உள்ளார்கள்.
இதற்கு நடுவில் தான் கொரோனா நோய்க்கான தடுப்பூசி வந்திருக்கிறது. விருப்பபட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதிகாவும் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதோ அவரது பதிவு…
#vaccine taken. Please protect yourself and loved ones go get vaccinated. Follow all safety norms ???????? pic.twitter.com/NdHMoGzaIk
— Radikaa Sarathkumar (@realradikaa) March 2, 2021