
பள்ளிகளை நிகழ்ச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள் இணைந்து நடனமாடும் வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. பள்ளி காலங்கள் நம்மால் எப்போதும் மறக்கவே முடியாது. அது ஒரு அழகிய பருவம். என்னதான் படிப்படி என்று ஆசிரியர்கள் நம்மை டார்ச்சர் செய்தாலும் அதையெல்லாம் தாண்டி நட்பு, ஆடல் ,பாடல், உறவு மகிழ்ச்சி என பல நினைவுகளை கொடுப்பது பள்ளி காலம்தான்.
அதுவும் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மிகவும் பிடித்த ஒன்று. ஆண்டு விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற சிறப்பு நாட்களில் நடனம் ஆடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வருகின்றது. 12 வது படிக்கும் மாணவிகள் இணைந்து பல பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் திரும்ப வருகின்றது. அதிலும் 12 ஆம் வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு நீங்கும்போது ஒருவித கஷ்டம் ஏற்படும். அவ்வளவுதான் இனிமே நம்மால் பள்ளிக்கு திரும்ப முடியாது என்ற ஏக்கம் இருக்கும் . இந்த ஏக்கத்தை பலரும் அனுபவித்துள்ளார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….