மறுபடியும் இவர்தான் தலைவரா?…கயிற்றில் தொங்கும் போட்டியாளர்கள்…. கடுமையான கேப்டன் டாஸ்க்… வெளியானது ப்ரோமோ…

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த பிக் பாஸ் 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. வாரம் ஒருவர் என பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி கொண்டுள்ளனர்.

   

கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற இந்த வாரம் குயின்சி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி உள்ளார். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு முடிச்சுடனும் இரண்டு கயிறு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கையாளும் ஒவ்வொரு கயிறை பிடித்த வண்ணம் மற்றவர்களின் கயிறை இவர்கள் அவிழ்த்து விடலாம். அதில் இறுதிவரை நிற்பவரே இந்த வார தலைவர் என்று கூறப்பட்டுள்ளது .

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவின் படி இறுதியாக மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கயிற்றில் தொங்கி கொண்டுள்ளனர். இறுதியில் யார் தலைவர் என்பதை நாம் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வைரல் ப்ரோமோ இதோ….