மறைந்த சீரியல் நடிகர் வெங்கட் அவர்களின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்- இதோ!

தமிழ் சினிமாவில் நேற்று (மார்ச் 22) இரண்டு சோகமான விஷயங்கள் நடந்தன. ஒன்று பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் அவர்கள் உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நேரத்தில் நேற்று மாலையே பிரபல சீரியல் நடிகர் வெங்கட் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலம்.

   

சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா தான். இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியது.

அவரது மரண செய்தியை கேட்ட பலர் அட இவரா என அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகளை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது வெங்கட் தனது குடும்பத்துடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதைப்பார்த்து அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.