மறைந்த நடிகை சித்ராவின் நினைவாக பெரிய மண்டபம் வைத்த ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா. தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி, அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கியவர் வி.ஜே. சித்ரா. கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. தைரியமாக பெண்ணாக இருந்த அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

   

சித்ராவின் மறைவு அவரது ரசிகர்களையும், அவருடன் இணைந்து பணிபுரிந்து வந்த நடிகர், நடிகைகளையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த அவர் இன்று நம்முடன் இல்லை. அந்த சீரியலை சித்ராவிற்காகவே பார்த்த ரசிகர்களும் இருந்தார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர்.

அவர் கணவரின் மோசமான செயல்களால் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போதும் சித்ராவின் ரசிகர்கள் அவரது வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளார்கள். தற்போது சித்ராவின் நினைவாக ஒரு பெரிய மண்டபம் ஒன்று வைத்துள்ளனர். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Bharusam (@chithuvj_darling_addict)