தமிழ் சினிமாவில் “பூ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி அவர்கள். அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக “மரியான்” படத்தில் நடித்தார். தமிழில் இரண்டு படங்கள் நடித்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பார்வதி அவர்கள்.
மலையாள திரைப்படங்களான பெங்களூர் டேஸ், சார்லி, உயரே, என்னு நிண்டே மொய்தீன் என தனது கேரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும், படத்தில் மட்டும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையையும் முடி வெட்டிக் கொள்வது உட்பட பல கெட்டப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் நடிகை பார்வதி, சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இந்நிலையில் தற்பொழுது பச்சை நிற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் யாருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்.