மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி! எதிர்பாராத விதமாக ஏற்பட்ட துயரம்.. பெற்றோர்களே உஷார்!!

மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி தவறி கீழே விழுந்ததில் சிகிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4வது மாடியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரனின் மகள் அக்ஷயா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

   

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை அக்ஷயா, தனது வீட்டின் மொட்டை மாடியில் சக தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக அக்ஷயா தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அக்ஷயாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் நிலைமையை பார்த்து பதட்டம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அக்ஷயாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அக்ஷயாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அக்ஷயா அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் விளையாடும்பொழுது பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.