மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் விளையாடி மாஸ் காட்டிய அமைச்சர் ரோஜா…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ….

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் விளையாடி மாஸ் காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘செம்பருத்தி’ படம் மூலம் அறிமுகமானார் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

   

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக தீவிர அரசியலில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலம் நகரி  தொகுதியின் எம்எல்ஏவாகவும்,, மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர் கே ரோஜா, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில் நடைபெற்ற ஜகன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் ,வாலிபால் விளையாடி அசத்தியுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் சித்தூர் மக்களவை உறுப்பினர் ரெட்டிப்பாவும் கலந்து கொண்டார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு ரோஜா அறக்கட்டளையின் கீழ் தனது சொந்த தொகுதியான நகரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளிலும் எம்எல்ஏ ரோஜா திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர் ரோஜா மாணவர்களுடன் இணைத்து விளையாடிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .