மாமியார் கர்ப்பம் ! மகன் திருமணத்தில் மருமகளுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சியில் உறவினர்கள்!!

மகனுடைய திருமண நிகழ்ச்சியில் பேசிய தாய், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது மருமகள் மற்றும் உறவினர்களிடையே அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து பெண் ஒருவர் Reddit – இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பெயர் குறிப்பிடாத அந்த பெண், தன்னுடைய திருமண நிகழ்வு மிகவும் சோகமானதாகவும், கசப்பானதகாவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது வேறு யாருமில்லை, மணப்பெண்ணின் மாமியார். கொரோனா காரணமாக மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

தங்களுடைய திருமணம் மிகவும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்த மணப்பெண்ணுக்கு, கொரோனா காரணமாக சிம்பிளாக நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், திருமணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்துள்ளது.

கொரோனா வழிமுறைகள் திடீரென அறிவிக்கப்பட்டதால், திருமணத்தை அவர்கள் ரத்து செய்ய விரும்பவில்லை. நெருக்கமான சொந்தங்கள் மட்டும் கூடி இருந்த திருமணத்தில், பாரம்பரியமாக கடைபிடிக்கும் சில சடங்குகளை மட்டும் நடத்தலாம் என திட்டமிட்டிருந்துள்ளனர்.

அதாவது, திருமண நாளில் பெண்ணின் தந்தையும், மணமகனின் சகோதரரையும் பேச வைக்க நினைத்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் மணமகனின் தாயும், ஒரு சில நல்ல விஷயங்களை பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

திருமண நாளில் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் மணமகளின் தந்தை, மணமகனின் தம்பி ஆகியோர் பேசியுள்ளனர். மணமகன் பேச இருந்த நேரத்தில் முன்கூட்டியே பேச விரும்புவதாக எழுந்த அவரின் தாய், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மகனின் திருமணத்தில் அவர்களை வாழ்த்தாமல், தன்னுடைய கர்ப்ப செய்தியை அவர் கூறியது அங்கிருந்தவர்களிடையே அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மணப்பெண்ணுக்கு தாங்க முடியாத கோ.ப.ம் வந்துள்ளது.

மகிழ்ச்சியான நாளில் எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர் அமைதியாக இருந்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையில், ” திருமண நாள் என்பது எங்களுக்கான நாள்.

மகனுடைய திருமணம் நடந்திருக்கும் அந்த நாளில் தாயாக இருக்கும் மாமியார், எங்களை வாழ்த்தாமல், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறியது எனக்கு தாங்க முடியாத கோ.ப.பதை வரவழைத்தது. ஏனென்றால், நானும் கர்ப்பமாக இருந்தேன். அந்த நல்ல நாளில் எங்களுடைய குழந்தை பற்றிய அறிவிப்பை உறவினர்களிடம் தெரிவிக்க நானும், கணவரும் எண்ணியிருந்தோம்.

ஆனால், என் மாமியார் அனைத்தையும் சொதப்பிவிட்டார். திருமணத்துக்கு பிறகு இரண்டு, மூன்று நாட்களுக்கு என் மாமியாரிடம் பேசவில்லை. உறவினர்களின் கவனத்தை எங்கள் மீது இல்லாமல், அவர் மீது திருப்பிக்கொண்டார். திருமண நாளில் அவரை பேச வைத்தது முட்டாள் தனமான ஒன்று, மிகப்பெரிய தவறு. அவர் எங்களை வாழ்த்துவதற்காக பேச இருக்கிறார் என்று எண்ணியிருந்தோம்.

முன்கூட்டியே அவரிடம் கேட்டிருந்தால், இந்த தவறு நடக்காமல் தவிர்த்திருக்கலாம். அதேநேரத்தில், எங்களுடைய கோ.ப.த்தையும் அவரிடம் நேரடியாக காண்பிக்கவில்லை. ஏனென்றால் அவர் கர்ப்பமாக இருக்கிறார். என் மாமியாரின் செய்கைக்காக நான் கோவப்படாமல் இருந்திருக்கலாம். மகிழ்ச்சியான நாள் ஒன்றை என் கோ.ப.த்தால் தவறவிட்டுவிட்டேன்” என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *