மாமியார் கழுத்தில் தாலி கட்டி, தர்ம அடி வாங்கிய மாப்பிள்ளை நடந்தது என்ன? இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அது சிலருக்கு சிறப்பானதாக அமைந்து விடுகிறது. ஆனால் சிலருக்கு மிகவும் மோசமானதாக நடந்துவிடும்.

   

இந்துக்களைப் பொறுத்தவரை திருமணத்தில் தாலி கட்டிக்கொள்வதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகவே முகூர்த்த நேரம் பார்த்து தாலிக் கட்டிக் கொள்கின்றனர். அதேபோல் திருமணம் என்றாலே ஆட்டம், பாட்டம், கேளிக்கைகளுக்கும் பஞ்சம் இருப்பது இல்லை

அந்தவகையில் இங்கேயும் புதுப்பேட்டை பட பாணியில் திருமண மேடையில் மாப்பிள்ளை ஒருவர் மணமகளுக்கு தாலி கட்டாமல் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு தாலி கட்டிய காட்சிகள் வைரலானதை தொடர்ந்து தற்போது மணமகளுக்கு பதில் மாமியாருக்கு தாலி காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இது உண்மையான திருமணம் அல்ல தெலுங்கு சீரியல் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங் காட்சிகள் என்பது தெரியவில்லை இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு வீடியோ பதிவு கீழே உள்ளது.