விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் தற்போது முன்னணியில் வர மிகவும் முக்கியமான காரணம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் என்று கூட கூறலாம்.
ஆனால் சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொஞ்சம் கீழே சரிந்தாலும் தற்போது முன்னேறி வருகிறது.
வி. ஜே. சித்ரா கதாபாத்திரத்தில் தற்போது புதிய முல்லையாக நடித்து வரும் நடிகை காவ்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
அவ்வப்போது ரசிகர்களை கவர புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காவ்யா, தற்போது மார்டன் உடையில் தான், நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.