மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணிக்கு இரண்டாம் திருமணம்..! கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகலையா?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கணவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி வருவதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. நடிகை சுரேகா வாணியின் முகத்தை பார்த்ததும் நம்மில் பலருக்கும் பார்த்த முகம் என்றே தோன்றும். சரிதானே, பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டரில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா நடிகையான இவர் உத்தம புத்திரன், தெய்வ திருமகள், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

   

சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றவர் தான் சுரேகா வாணி. இவருக்கு தற்போது 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி அவருக்கு பாசிடிவ் விமர்சனமாக மாறி பட வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகிறதாம். சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார். தன் மகள் சுப்ரிதாவுடன் தனியே வசித்து வருகிறார். சமீப நாட்களாக அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் எனவும், அவரின் மகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் சுற்றிவந்தன. இதனை மறுத்துள்ள சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. என் மகளை ஹீரோயினாக்குவதே என் நோக்கம் என கூறியுள்ளார்.