மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் சீயான் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்- இதோ அவரது நியூ லுக்

சீயான் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர். இவரின் நடிப்புக்கே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இவர் நடிப்பில் கடைசியாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது. நடிகர் விக்ரம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

   

பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் கர்ணன் படத்தில் இருந்து விக்ரம் விலகிய செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து விக்ரம் நடிப்பில் பெரிய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இவர் கோப்ரா திரைப்படத்தில் பிஸியாகி விட்டார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோப்ரா படத்தில் படப்பிடிப்பு தற்போது மீண்டும் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் தற்போது அப்படத்தின் ஷட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. அதில் சீயான் விக்ரம் என தெரியாத அளவில் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..