மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. என்ன இப்படி இருக்கிறார் என விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள் ..

தமிழ் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

   

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது வென்ற நடிகையாகவும் விளங்குகிறார். இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா என்ற திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியானது, ஆனால் அப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. மேலும் தமிழில் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் செம பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அண்மையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மீண்டும் அவரை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.