மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் ஷிவாங்கி…. லைக்ஸை அள்ளிக்குவிக்கும் காணொளி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், பழைய நிகழ்ச்சியினை மக்கள் இன்னும் கண்டுகழித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் ஆகியவர்கள் வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் இவர்களில் பலர் திரையுலகிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   

அஸ்வின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் புகழ், ஷிவாங்கி ஆகியோரும் நடிக்க தொடங்கிவிட்டனர் என்பதும், தர்ஷா பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சி பலருக்கும் திருப்புமுனையாக அமைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் செட்டுக்கு மீண்டும் ஷிவாங்கி சென்றுள்ள காணொளியினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், ‘இங்கே தான் நான் நின்று கொண்டிருப்பேன், இங்கே 3 கேமராக்கள் இருக்கும், அங்கே புகழ் அண்ணன் இருப்பார், என்னை பார்த்தவுடன் ஓடி வருவார், என்று ஷிவாங்கி தனது மலரும் நினைவுகளை கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.