மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரீ கொடுக்கும் சரவணன்-மீனாட்சி சீரியல் நடிகை!! எந்த சீரியலில் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஒரு காதல் தொடர் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தொடர்களில் ஒன்று. இந்த சீரியலின் பாடல் கூட பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதில் ஜோடியாக நடித்த செந்தில்-ஸ்ரீஜாவை கொண்டாடாத மக்களே இல்லை. அதே பெயரில் பல கதைகள் வந்தாலும் முதலில் வந்த ஜோடிக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

   

இவர்கள் நிஜத்திலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட அப்படியே நடந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள். ஆனால் சில வருடங்களாக ஸ்ரீஜாவை சீரியல் பக்கமே காணவில்லை, அவரது கணவர் செந்தில் மட்டும் சீரியல்கள் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் முதல் சீசனில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. இரண்டாவது சீசனில் அவர் இல்லை.

இந்த சீரியலுக்கு பிறகு மாப்பிள்ளை தொடரில் நடித்தார், அதன்பின் சின்னத்திரை பக்கமே அவரை காணவில்லை. தற்போது நல்ல கதைகளையும், கேரக்டர்களையும் செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரீ கொடுக்க உள்ளார். இப்போது விஜய்யில் ஒளிபரப்பாக போகும் வேலம்மாள் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வருகிறாராம்.