அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்.
எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார்.
அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கேயும் ஒரு இளைஞரின் தாய்ப் பாசம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்
வாலிபர் ஒருவருக்கு முதன் முறையாக வேலை கிடைத்தது. அதிலும் நம் நாட்டு ராணுவத்தில் ராணுவ வீரர் வேலை. அந்த மகனை அவரது தாய் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அந்தப் பெண் மீன் விற்று பிழைப்பு நடத்துபவர்.
மீனை மொத்தமாக விலைக்கு வாங்கி சந்தையில் வைத்து விற்று கஷ்டப்பட்டு சேர்த்த காசில் தன் மகனை படிக்க வைத்தார். மகன் ராணுவத்தில் சேர்ந்த பின்பு முதன் முறையாக ஊருக்கு வந்தார்.
நேராக அம்மாவின் மீன் சந்தைக்குச் சென்றவர் அம்மாவின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, தன் ராணுவத் தொப்பியை அம்மாவுக்கு சூட்டி அழகுபார்த்தார். அந்தத் தாயும் ராணுவ உடையில் தன் மகனைப் பார்த்ததும் சல்யூட் அடித்து மரியாதை செய்கிறார். இந்தக் காட்சி தாய்ப்பாசத்தையும், நாட்டுப்பற்றையும் ஒருசேர நம் மனதுக்குள் கடத்துகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.
View this post on Instagram