முதலாமாண்டு திருமண நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் அவரை கொலை செய்துவிட்டனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பரமதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி (21). இவருக்கும் அபிஷேக் என்ற இளைஞனுக்கும் கடந்தாண்டு மே மாதம் 24ஆம் திகதி திருமணம் நடந்தது.

   

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தங்களது முதலாமாண்டு திருமண நாளை தம்பதி கொண்டினார்கள். அப்போது இருவரும் கேக் வெட்டியுள்ளனர். இந்த நிலையில் அதே நாளில் கீதாஞ்சலி விஷம் குடித்துவிட்டதாக அபிஷேக் தனது மாமனார், மாமியாருக்கு போன் செய்திருக்கிறார்.

இதை கேட்டு பதறிய அவர்கள் அங்கு வந்த போது கீதாஞ்சலி உயிருக்கு போராடியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில் அபிஷேக் மற்றும் குடும்பத்தார் தான் கீதாஞ்சலியை கொலை செய்துவிட்டனர் என அவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து சடலத்தை அபிஷேக் வீட்டுக்கு எடுத்து சென்ற அவர்கள் அங்குள்ள முற்றத்தில் இறுதிச்சடங்கு நடத்தி புதைத்தனர். பின்னர் அவர்கள் பொலிசில் அளித்த புகாரில்,

அபிஷேக் வீட்டார் 51 சவரன் நகைகளை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் எங்களால் அவ்வளவு கொடுக்கமுடியவில்லை, சிறிது சிறிதாக கொடுத்து வந்தோம்.

இது தொடர்பாக கீதாஞ்சலியை அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். திருமண நாளில் கேக் வெட்டி கொண்டாடுவது போல காட்டிவிட்டு அபிஷேக் தான் விஷத்தை வ.லுக்கட்டாயமாக கீதாஞ்சலி வாயில் ஊற்றியிருக்கிறான் என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.