தென்னிந்திய திரையுலகில் டாப் 3 கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் கமிட் ஆகும் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது. தமிழில் நடிக்ர் முரளியின் மகன் அதர்வா அறிமுகம் ஆன ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சமந்தா. ராஜமெளலி இயக்கிய ஈ திரைப்படமே அவரை இந்தியா முழுவதும் அறியவைத்தது.
அவர் கல்யாணத்துக்கு பின்பு நடித்த படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. வெகுசிலருக்கு மட்டுமே அரிதாக இப்படியான வாய்ப்பு அமையும். அது சமந்தாவுக்கும் வாய்த்து இருக்கிறது. இவர் நடிப்பில் தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்களையும், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சென்னை பல்லாவரம் மலையை குறிப்பிட்டு ” முதல் காதல் இங்கு தான்.. இதயம் உடைந்தும் இங்கு தான்.. கண்ணீர் விட்டு அழுத்தும் இங்கு தான் ” என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
View this post on Instagram