முத்து பட நடிகையா இது..? இவ்ளோ பெரிய பசங்களா..! என்ன பன்றாங்க தெரியுமா.?புகைப்படம் உள்ளே!

சென்னைதான் என்னோட சொந்த ஊர். எங்க அப்பா அரசாங்க வேலையில் இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எங்க வீட்டுல மூணு பசங்க. எங்க மூணு பேரையும் நல்ல சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல அப்பா படிக்க வெச்சார்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை விசித்ரா.

   

“என்னோட அம்மா, அப்பா காதல் திருமணம் செஞ்சவங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, ஆஃபீஸ் விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில ஒண்ணாச் சேர்ந்து நடிச்சாங்க. அப்போதான் ரெண்டு பேருக்கும் இடையில காதல் மலர்ந்து இருக்கு. திருமணம் முடிச்சு சக்சஸ்ஃபுல் தம்பதியா வாழ்ந்தாங்க. அப்பாவுக்கு சினிமா பிடிக்கும். கமல் சாருடைய `மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்துல நடிச்சிருக்கார். இதுதவிர ஆல் இந்தியா ரேடியோவில் வேலைப் பார்த்திருக்கார். அரசாங்க வேலை கிடைச்சதனால கலைத்துறையில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியலை.

நான் பத்தாவது படிச்சிட்டு இருக்கும் போது என்னோட முதல் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலை. ரெண்டாவது படமா எனக்கு அமைஞ்சது `ஜாதி மல்லி’. பாலசந்தர் சார் வாய்ப்புக் கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். இயக்குநர் பிரதாப் போத்தன் எடுத்த `ஆத்மா’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்புகளை அதன்பிறகு ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

டான்ஸ் ஆடுறது எனக்கு ஈஸியான விஷயமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, சின்ன வயசுலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். சினிமாவுல இருந்த எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸ் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும் போதே, சீரியலிலும் நடிச்சேன். நல்ல கேரக்டர்ஸ் தேடி வர ஆரம்பிச்சது. கமல் சார் தவிர சினிமாவில் எல்லா சீனியர் நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன்.

`முத்து’ படத்துல என் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. ரதிதேவி என்கிற கேரக்டருல நடிச்சிருந்தேன். இந்த கேரக்டருல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட சொன்னதே ரஜினி சார்தான். அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தோட வாய்ப்புக் கிடைச்சது. `வீரா’ படத்துல அவர்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அதனால அவருக்கு என்னோட நடிப்புத் திறமை தெரியும்ங்குறனால அவருடைய படங்களில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். இந்த நேரத்தில் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

ரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்த காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிட்டேன். நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் தவிர்த்தேன். அதுக்குக் காரணம் என் திருமணம். 2001 ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னோட கணவரை முதன் முதலா கேரளாவில் இருக்கிற ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். ஜி.எம்.மா வொர்க் பண்ணுனார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனோம்; பிடிச்சிருந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் ஹோட்டல் துறையில் இருந்ததுனால மும்பை, பூனே, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா வேலை விஷயமா ஷிப்ட் ஆக வேண்டிருந்தது. அதனால, சினிமாவுக்கு குட்பைய் சொல்லிட்டு கணவர்கூட நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். எங்களுக்கு மூணு ஆண் குழந்தைகள். பெரிய பையன் பத்தாவது படிக்குறான். அடுத்து ட்வின்ஸ். அவங்க நாலாவது படிக்குறாங்க. பசங்க படிப்பு காரணமா இப்போ மைசூரில் செட்டில் ஆகிட்டோம்.

பத்தாவது படிக்கும் போதே சினிமாவுக்கு நடிக்க வந்திருந்தாலும் தபால் மூலமா காலேஜ் படிச்சேன். பி.ஏ.சைக்கலாஜி படிச்சேன். திருமணம் முடிந்து பசங்க பிறந்ததுக்குப் பிறகு எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் படிச்சேன். அதனால ப்ரைவேட்டா கவுன்சலிங் கொடுத்துட்டு இருக்கேன். நிறையப் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பேன். என் பசங்க படிக்குற ஸ்கூலுக்கும் கவுன்சலிங் கொடுக்க அப்பப்போ போவேன். மன திருப்தியுடன் இதைச் செஞ்சிட்டு இருக்கேன். இதுதவிர மைசூரில் எங்களுக்குச் சொந்தமா ரெண்டு ஸ்டார் ஹோட்டல்ல இருக்கு. அப்புறம், ஜெயா கிச்சன்ஸ்னு ஒரு கம்பெனியும் நடத்திட்டு வரேன். இந்த கம்பெனிக்கு நான்தான் எம்.டி. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குறதுக்கு என் கணவர் ஷாஜிதான் காரணம். எனக்குப் பக்க பலமா இருப்பார். அழகான குடும்பம், பிசினஸ்னு செட்டில் ஆயிட்டேன். வாழ்க்கை சந்தோஷமாப் போகுது” என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகை விசித்ரா.