
நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் என்று அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கி இருப்பவர் நடிகை அதிதி சங்கர். இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்து கலக்கியுள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல ஒரு டாக்டரும் கூட.
கல்லூரிகளில் படிக்கும் பொழுதே நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார். இவரது முதல் திரைப்படம் ‘விருமன்’. தனது முதல் படத்திலேயே நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் களமிறங்கி பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ‘மதுரை வீரன்’ என்ற ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது கொரனா குமார் மற்றும் மாவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். இவர் ஒரு வாரிசு நடிகையாக களம் இறங்கி இருந்தாலும் டாக்டர், மாடல், சிங்கர் என பன்முக திறமையை கொண்டுள்ளார். தன்னுடைய உழைப்பால் தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சியத்துதுடன் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ…
View this post on Instagram