முன்னணி நடிகை அனுஷ்காவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் குடும்பம் புகைப்படம்!

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

   

இதனை அடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது.

ஆனால் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். அதனால் தற்போது வரை அனுஷ்கா வால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் படம் வெளியானது. இந்நிலையில் 39 வயதாகும் நடிகை அனுஷ்கா தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..