மெட்ரோ ரயிலில் மாஸாக வலம் வரும்… தளபதியின் ‘வாரிசு’ பட போஸ்டர்!!!… கலக்கல் புரமோஷன் வீடியோ இதோ….!!!

‘வாரிசு’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் காக சென்னை மெட்ரோ ரயிலில் தளபதியின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்ற பட குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா என மிகப்பெரிய நட்சத்திரபட்டாளமே நடித்துள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் உருவாகுமே இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வழங்க உள்ளது.

இப்படத்தில் தமன் இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் வேற லெவலில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு என்பவர் தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக சென்னையில் மெட்ரோ ரயில் தளபதியின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இப்படத்தினை வழங்க இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்த வீடியோவினை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ தளபதியின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….