ரசிகர் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை…. தீயாய் பரவும் வீடியோ இதோ….

நடிகை ப்ரணிதா சுபாஷ் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தபோது ரசிகர் ஒருவர் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நடிகை பிரணிதா பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சைமா, ஃபிலிம் பார் போன்ற பல விருதுகளையும் பெற்றவர் நடிகை ப்ரணிதா.

   

கன்னட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு படம் பட வாய்ப்புகள் குறையவே தொழிலதிபர் நித்தின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘அர்னா ‘ என்று பெயர் சூட்டினார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் அவ்வப்போது தனது குழந்தை மற்றும் கணவனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

தற்பொழுது இவர் திருமலை கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த போது அங்கே ரசிகர்கள்  அவருடைய அனுமதியின்றி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….