விஜய் தொலைக்காட்சியின் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர் தான் புகழ் அவர்கள். இவர் “அது இது எது” என்ற நிகழ்ச்சியில் இடம்பெறும் “சிரிச்சா போச்சு” சுற்றில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பல நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளார் புகழ் அவர்கள்.
மேலும், அதே டிவியில் ஒளிபரப்பான ” குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், முதல் இரண்டு சீசன்களில் பங்கு பெற்றார். நடிகர் அஜித்துடன் வலிமை, நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், “Zoo கீப்பர் ” எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இன்று ஃபைனல் என்பதால் புகழ் அவர்கள், “முத்து” என்ற செம்ம ஹிட்டான படத்தில் வரும் ரஜினிகாந்த் போலவே வே டமிட்டு ள்ளார். இதோ இணையத்தில் உலா வரும் புகழ் அவர்களின் getup -ஐ நீங்களே பாருங்க..