ரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியதா? அட, இவங்க இந்த படத்தில் நடிச்சிருக்காங்களா? புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை நடிகர் சூப்பர்ஸ்டார் எண்ணற்ற படங்களில் வரை அதேபோல இவர் ஆரம்பத்தில் நடித்த படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் இவருடன் நடித்திருந்தார்கள் இவரது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு பிரபலங்கள் தற்போது நாயகிகளாகவும் நடிகர்களாக வாழ்ந்து வருகிறார்கள் அந்தவகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி கூட ஒரு மிகப்பெரிய பிரபலம் தான்.

   

பிஞ்சு முகம் கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும் சிரிப்பு என்று இருக்கும் இந்த சிறுமியை கண்டதும் பலரும் இது மீனா தானே என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் இது நடிகை மீனா கிடையாது, இந்த சிறுமி பிரபல பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம் தான். அனுராதா ஸ்ரீராம் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது ஏன் ஆர் ரகுமான் தான் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக அறிமுகமானார் அனுராதா ஸ்ரீராம் அதன் பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் இவர் இளையராஜா துவங்கி யுவன் சங்கர் ராஜா வரை பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என்று பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் அனுராதா ஸ்ரீராம் கமல் நடித்த அன்பே சிவம் படத்தில் இவனுக்கு டப்பிங் கொடுத்ததும் அனுராதா ஸ்ரீராம் தான் இப்படி பல பாடல்களை பாடிய அனுராதா ஸ்ரீராம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

தற்போது ஐம்பது வயதைத் தொடும் பாடகி அனுராதா ஸ்ரீராம், சிறுமியாக இருந்தபோது ரஜினியுடன் காளி படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காளி படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.