‘ரஞ்சிதமே’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட காமெடி நடிகர் கிங்காங்… தளபதிக்கே டப்  கொடுப்பார் போலயே… வீடியோ உள்ளே…

தமிழில் முன்னணி காமெடி நடிகரான நடிகர் கிங்காங் ‘வாரிசு’ திரைப்படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி காமெடி நடிகராக விளங்குபவர் நடிகர் கிங் காங். இவரின் உண்மையான பெயர் சங்கர். இவர் திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 500 நாடகங்களுக்கு மேல் நடித்த இவருக்கு திரையுலகில் முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் கலைப்புலி திரு சேகரன்.

   

இவர் ‘ஊரை தெரிஞ்சுகிட்டேன்’ என்ற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து காதல் பூனைகள், ஜமீன் கோட்டை என பல படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது. இவருடைய திரை பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘அதிசய பிறவி’. இதில் அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து அசத்தி இருப்பார்.

இந்த படம் மூலம் உலகம் எங்கும் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகரான ரஜினிகாந்துடனும், தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி உடனும், கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் உடனும், ஹிந்தியில் முன்னணி நடிகரான ஷாருக்கான் உடனும் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார்.

இவர் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதை’ முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள் கையினால் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இளைய தளபதி விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்தில் வரும் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….