நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அவரின் முதல் படத்திலே ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் ஆண் தேவதை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து இவருக்கு அதிகப்படியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதன்பின் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மிகவும் பிரபலமானார். தற்போது அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனின் தம்பியான பரசு பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.