ராணுவத்தில் இருந்து திரும்பிய மகன் அப்பாவுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!காண்போரை நெகிழ வைக்கும் வீடியோ..!

வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும்.

   

அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதைவிட ராணுவத்தில் இருப்பவர்களின் நிலையோ இன்னும் சிக்கலானது.

வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் பதட்டத்துடனே இருப்பார்கள். அதிலும் போர் பற்றி செய்தித்தாள்களில் பார்த்தாலே பதட்டம் ஆகிவிடுவார்கள். இது அத்தனையையும் நம் தாய்நாடு என்பதற்காகவே தியாக மனப்பான்மையோடு வீரத்தோடு சகித்துக் கொள்வார்கள்.

ராணுவ வீரர்களும் துப்பாக்கி,  ஆயுதங்களோடு சினேகித்து குடும்ப உறவுகளைப் பார்ப்பதற்காக ஏங்கித்தான் ஊருக்கு வருவார்கள். இங்கே அப்படித்தான் சில ராணுவ வீரர்கள் லீவுக்கு ஊருக்கு வருகிறார்கள். 

அப்படி வந்த ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்களின் தொகுப்பு தான் இந்த வீடியோ…இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.