ரூ.150 கோடியில் தனுஷின் புதிய சொகுசு வீடு…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் கிட்டத்தட்ட எட்டு கிரவுண்ட் நிலத்தில் பிரம்மாண்டமான வீடை கட்டி வருகிறார். அதற்கான பூமி பூஜை கடந்த வருடம் நடைபெற்றது.

அதில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தனுஷின் மிகப்பெரிய இந்த கனவு வீடு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டை தனுஷ் வடிவமைத்துள்ளார். அங்கு நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கு வசதி, அனைத்து உபகரணங்களையும் கொண்ட ஜிம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஹோம் தியேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்த வீட்டில் உள்ளது.

அது மட்டுமல்லாமல் தனது வீட்டின் படுக்கை அறைகள், சமையலறை மற்றும் டைனிங் ரூம் என அனைத்தையும் சர்வதேச தரத்தில் தனுஷ் வடிவமைத்துள்ளார். மிக விரைவில் இந்த வீட்டின் கட்டிடப் பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ளது. எனவே இன்னும் சில மாதங்களில் வீட்டின் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.