லாஜிக்கே இல்லாமல் இருக்கு.. தயவுசெய்து இந்த சீரியலை நிறுத்துங்கள் என கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்!!

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல்கள் தான் இப்போது வீட்டில் இருக்கும் பெண்களின் பொழுதுபோக்காக உள்ளது.

   

எல்லா தொலைக்காட்சிகளிலும் மக்கள் எதுபோன்ற சீரியல்களை பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு ஒளிபரப்புகிறார்கள். TRPயிலும் சீரியல்களின் சண்டை அதிகமாக உள்ளது. முன்னணி தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதிலும் யாரடி நீ மோஹினி, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

அண்மையில் இந்த சீரியலின் வில்லி ஸ்வேதா இறந்ததாக காட்டப்பட்டது. முக்கிய கதாபாத்திரம் என்பதால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணமாக இறந்துவிட்டதாக காண்பிக்கப்பட்ட ஸ்வேதா மீண்டும் உயிருடன் வந்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் லாஜிக்கே இல்லாமல் உள்ளது, தயவுசெய்து சீரியலை நிறுத்துங்கள் என லேட்டஸ்ட்டாக வந்து இந்த சீரியல் புரொமோ கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.