
இயக்குனர் பாரதி நடிகர் வடிவேல் அவர்களை பற்றி பேசி இருக்கும் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘கண்ணாத்தாள்’ பட இயக்குனரான பாரதி கண்ணன் ஸ்ரீ பண்ணாரி அம்மன், ராஜராஜேஸ்வரி, கரகாட்டக்காரி, வயசு பசங்க போன்ற பலபடங்களை இயக்கியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களில் நடித்துக் கலக்கிக் கொண்டு வருகிறார்.
இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில். ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கண்ணாத்தாள்”.இத்திரைப்படம் 1998 இல் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டிப்பர் ஹிட் ஆகியது. இப்படத்தில் வடிவேலு, மணிவண்ணன், வடிவுக்கரசி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தனர்.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நடிகர் வடிவேலின் காமெடி காட்சிகள் என்றே கூறலாம். இப்படத்தில் நடிகர் வடிவேலு தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமான சூனாபனா கதாபாத்திரத்தை மிகவும் திறமையாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் காட்சி மக்கள் மத்தியில் இன்றும் பிரபலம் தான்.
இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன் பிரபல பத்திரிக்கை ஒன்று இருக்கு பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘லோக்கல்லாக இருக்கும் நடிகர் வடிவேலுவை தான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த வடிவேலுவை மக்கள் எதிர்பார்க்கல’ என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல சுவாரசியமான விஷயங்களையும் இந்த வீடியோவில் இயக்குனர் பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.
வைரலாகும் வீடியோ இதோ…