‘வர வர டிரஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது’.. மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்..

கடந்த 2015- ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் இவரை நடிகையாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். அதன் பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் “ரெமோ” படத்தில் நடித்தார்.

   

மேலும், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். மேலும், சமீபத்தில் தான் இயக்குனர் செல்வராகவனுடன் “சாணிக் காகிதம்” என்னும் படத்தில் நடித்தார்,

இந்நிலையில் சிகப்பு நிற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தன்னுடைய இஸ்ட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதோ அந்த போட்டோஸ் உங்களுக்காக…