தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இளைஞர்களுக்கான இசையைக் கொடுத்ததன் மூலம், வெகுவிரைவில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் அனிருத். அதனால்தான் தமிழகத்தின் ‘ராக் ஸ்டார்’ என அவரைக் குறிப்பிடுகின்றனர். 3 படத்தை தொடர்ந்து கத்தி, வேதாளம், மாரி, தர்பார், மாஸ்டர் என தற்போது வரை பல சூப்பர்ஹிட் பாடல்களும், மாஸான பி.ஜி.எம் என போட்டு முன்னணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.
தற்போது இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இவர் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகவிருந்த விக்ரம் 60 படத்தில் அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமானார்.
மேலும் தற்போது அனிருத் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஆம் அனிருத் தற்போது செம பிஸியாக இருப்பதால், திரைப்படத்தின் காட்சிகள் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் கொடுக்கும் டியூனை எடுத்துக்கொள்ளும் படி கூறியுள்ளார். அவர் கொடுக்கும் டியூன் கார்த்திக் சுப்ராஜ்க்கு செட்டாகத்தால், அவர் விரும்பும் படியான டியூனை கொடுக்கும் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.