தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர் விஜய். கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய், அசின் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க முடியாது. க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை சந்தித்து நான் தான் உன் அம்மு குட்டி என்று விஜய்யை திருமணம் செய்து கொண்டு அசினுக்கு அல்வா கொடுத்து விடுவார்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான். தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை.
தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர முடியவில்லை. அதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்து வந்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தார். ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.