விஜய்யின் பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவா இது? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. தெறி, பிகில், மெர்சல் என தொடர்ந்து தளபதி விஜய்யின் படங்கள் வசூல் சாதனை புரிந்து வருகின்றன.

   

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் தொடர்ந்து விஜய் நடிப்பில் பிளாப் திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கீதா, இவர் அப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரணவனனை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..