விஜெ ரக்ஷன் மனைவியுடன் காரில் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் விஜே ரக்‌ஷன். இந்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

   

தொகுப்பாளராக அசதி வந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து பெரிய அளவில் பிரபலமானார். பிரபலங்கள் சிலர் தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அப்படி செய்வது அவர்களது விருப்பம். தொகுப்பாளர் ரக்ஷனும் அப்படி தான், இதுவரை தனது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே சொன்னது இல்லை.

இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல வருடங்களாக மறைத்து வைத்திருந்த தனது திருமணம் குறித்து மனம் திறந்தார் ரக்‌ஷன். அவருக்கு திருமணம் ஆகி குழந்தையே இருக்கிறதாம், இந்த விஷயம் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் கூறினார்கள். அதன்பிறகே தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டார் ரக்ஷன். தற்போது அவர் தனது மனைவியுடன் காரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…