சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பல்வேறு விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்து வந்தவர் தான் ரக்ஷன், பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் விஜே ரக்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தொகுப்பாளராக அசதி வந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து பெரிய அளவில் பிரபலமானார். இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல வருடங்களாக மறைத்து வைத்திருந்த தனது திருமணம் குறித்து மனம் திறந்தார் ரக்ஷன்.
இதனிடையே தற்போது அவரின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தத்துவம் ஒன்றையும் கூறியுள்ளார். அதில் “தினமும் ஸ்டேட்டஸில் எப்படி காதலிக்கிறோம் என்பதை சொல்வதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி”.