விமானத்தில் பொது மக்களுடன் பயணம் செய்த சூர்யா-ஜோதிகா! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர். சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் OTT தளத்தில் வெளியான சூரரைப் போற்று படம் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. அடுத்தடுத்து இவரின் படங்கள் வெளியாக இருக்கின்றன.

   

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை முக்கிய நட்சத்திரங்கள் உடன் அண்மையில் நடந்தது, கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமின்றி சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகா இருவரும் பொது மக்களுடன் விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.