வியப்பில் சேப்பாக்கம் மக்கள்! அப்படி என்ன செய்தார் உதயநிதி?

கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற உதயநிதி தற்போது செய்யும் செயலால் சேப்பாக்கம் மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.இளைஞர் அணி தலைவராக வலம்வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது சென்னை சேப்பாகம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ வாக பதவி ஏற்றுள்ளார்.

   

10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக ஆட்சிக்கு வந்தது பெரிதும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது மக்கள் முழு கவனத்தினையும் வைத்து வருகின்றனர்.ஆம் தான் நின்ற தொகுதியில் ஏகப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயநிதி, தற்போது தன்னுடைய செயலை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றார்.சேப்பாக்கம் பகுதியில் உள்ள தொகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உணவுப்பொருட்கள் மற்றும் இரவு உணவினையும் வழங்கி வந்தார்.

பின்பு புதுப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில், அங்குள்ள குடிசை மாற்று குடியிருப்பு அருகே பல ஆண்டுகள் குப்பைகளை சுத்தம் செய்ய பெண் ஒருவர் கோரிக்கை வைத்ததையடுத்து, அதனை உடனே உதயநிதி ஸ்டாலின் குறைகளை தீர்த்துள்ளார்.

இந்நிகழ்வு சேப்பாக்கம் தொகுதி மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருவதுடன், உதயநிதியை பாராட்டியும் வருகின்றனர்.