நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு வாயில்லாத ஜீவனை கொன்று விட்டே தான் இருக்கிறோம். அதேபோல் மனிதனின் வாழ்வாதாரத்திற்காக காடுகளை அழித்து வீடுகளும் ,தொழிற்சாலைகளும் அமைத்து விலங்குகளுக்கு அணைத்து வகையிலும் துன்பம் கொடுத்து கொண்டே தான் வருகிறோம் ,
சமீப காலங்களில் விலங்குகள் ரயில் வண்டிகளில் சிக்கிக்கொண்டு உயிர் இழப்பது வழக்கமாகி விட்டது .இதில் மனிதர்களே முழுக்க முழுக்க காரணமாக இருந்து வருகின்றனர் ஏனென்றால் அந்த மாடுகளை நாம் கவனமாக பராமரிப்பதில்லை ஆதலால் அந்த உயிரினமானது உணவு தேடி கொண்டு ரயில் நிலையங்களுக்கு கூட வந்து கொண்டிருக்கின்றது ,
சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் மாடு ஒன்று மெல்ல நடை போட்டு கொண்டு ரயில் தண்டவாளத்தில் மெதுவாக சென்றது ,இது ரயில் நிலையம் என்பதால் அந்த மாட்டிற்கு ஒன்றும் ஆகவில்லை அதனால் அந்த ரயிலும் மெதுவாகவே வந்தது ,இதனை பார்த்த ஒரு சிலர் அந்த மாட்டின் முதலாளியை திட்டி தீர்த்து வருகின்றனர் .,