வைல்ட் கார்ட் என்ட்ரியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் பிரபலம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை.

   

மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் வெற்றியின் மூலம், புகழ், சிவாங்கி என பலரும் திரையுலும் நடிப்பதற்காகவும் சென்றுள்ளனர். அந்த வகையில், சீரியல் நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட இவர் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த தர்ஷா குப்தா, கண்டிப்பாக வருவேன். ஆனால் எப்போது வருவேன் என தெரியவில்லை. சமைக்கிறேனோ இல்லையோ பழைய நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.