பத்திரிக்கையாளராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் தான் இளம் நடிகையான திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்துள்ளார். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இவர் முதலில் நடித்தது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தில் தான்.
அதன்பின் மதில், எதற்கும் துணிந்தவன், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்த இவரை நடிகர் சூர்யா அவர்கள் இவரை மேடையில் பாராட்டினார். தற்போது இவரின் கவனம் முழுக்க முழுக்க சினிமா மீது திரும்பியுள்ளது.
மேலும், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள். இந்நிலையில், கவர்ச்சியான ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்…